
குட் பேட் அக்லி படத்தின் ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்? ரசிகர்கள் அப்செட்..!
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர்.
ஆனால் தற்போது திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் படக்குழு இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
