ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட ‘மூன்வாக்’ மூவி ஸாங் வைரல்..

Web Ads

பிரபுதேவா கதா​நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம், ‘மூன்​வாக்’. இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்​ஸ்​லி, ராஜேந்​திரன், சுவாமி​நாதன் உள்பட பலர் நடித்​துள்​ளனர். மனோஜ் நிர்​மலாதரன் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரகுமான் இசையமைத்​துள்​ளார்.

பிஹைண்ட்​வுட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தின் அனைத்து பாடல்​களை​யும் ஏ.ஆர்.ரகுமான் பாடி​யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்​படத்​தில் இருந்து வெளி​யான ‘ஏத்​து’ வீடியோ பாடல் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அதில் பிரபுதேவா கடின​மான நடன அசைவு​களை எளி​தாக ஆடி ரசிக்க வைத்​துள்​ளார். இப்​பாடல் வெளி​யான 2 வாரங்​களி​லேயே யூடியூப்​பில் 11 மில்​லியன் பார்​வை​களைக் கடந்​துள்​ளது.

இப்​பாடலுக்​கு, ஆப்பிரிக்​கா​வின் பிரபல​மான ‘ஹைபர்ஸ் கிட்ஸ் ஆப்பி​ரிக்​கா’ என்ற குழந்​தைகள் இசைக்​குழு, நடன​மாடி வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளனர். இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரகுமான் அந்த நடனத்தை வரவேற்று பதிலளித்​துள்​ளார். அந்த வீடியோ இணை​யத்​தில் வைரலாகி வருகிறது.

african band dances to the song yethu from moonwalk film
african band dances to the song yethu from moonwalk film