அதிக பவுன்சர்களுடன் வர காரணம் என்ன?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..

ஹாலிவுட் படங்​களில் கவனம் செலுத்தி வரும் பிரி​யங்கா சோப்​ரா, ராஜமவுலி இயக்​கும் ‘வாரணாசி’ படத்​தில் நடித்து வரு​கிறார். இப்படத்தில் மகேஷ்​பாபு ஹீரோ​வாக நடிக்​கிறார். பிருத்​வி​ராஜ் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றார். இப்​படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில் பிரி​யங்கா சோப்​ரா தற்போது அதிக பவுன்​சர்​களு​டன் வெளி​யில் வரு​கிறார். சமீபத்​தில் கோல்​டன் குளோப் விருதுக்​குச் சென்ற போதும் ஏராள​மான பவுன்​சர்​களு​டன் வந்​தார். ஏன் இந்த திடீர் மாற்​றம் என்​பது பற்றித் தெரிவிக்கையில்,

‘யா​ராவது என்னை அணுகி புகைப்​படம் எடுப்​ப​தில் எந்​தப் பிரச்​சினை​யும் இல்​லை. என்​னிடம் பேச வருபவர்​களை நேசிக்​கிறேன் என்​பதை பவுன்​சர்​கள் அறி​வார்கள். ஆனால், என் அனு​ம​தி​யின்றி புகைப்​படங்​கள் எடுப்​ப​தைத் தவிர்க்கவே அவர்​கள் இருக்​கிறார்​கள். எல்லோரும் செல்போன் வைத்திருப்ப​தால், அது போன்ற பிரச்சினையை அடிக்கடி எதிர்கொள்கிறேன்.

என் மகளு​டன், பூங்​காவில் இருக்​கிறோம் அல்​லது ஐஸ்​கிரீம் சாப்​பிடு​கிறோம் என்​றால் அடுத்த சில நிமிடங்​களி​லேயே அதை திடீரென்று ஆன்​லைனில் பார்ப்​பேன். அதைத் தவிர்ப்​ப​தற்​காக, அந்த பாது​காப்​புக்​காகவே பவுன்​சர்​களை நியமித்​துள்​ளேன். வேறு காரணமில்​லை. யாரும் என்​னைக் கொல்​லப் போவதில்லை’ என கூறியுள்​ளார்.

why so many bouncers priyanka chopra explain
why so many bouncers priyanka chopra explain