Pushpa 2

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த சாக்ஷி அகர்வால் திருமணம்.. போட்டோஸ் இதோ..!

பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது சாக்ஷி அகர்வால் திருமணம்.

actress sakshi agarwal marriage photos

actress sakshi agarwal marriage photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாக்ஷி அகர்வால். காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தனது குழந்தை பருவ காதலரான நவநீத்துடன் அவருக்கு ஐடிசி கிராண்ட் கோவாவில் நேற்று கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.