சூர்யா-கார்த்தி நடித்த படங்களுடன் பிரதீப் நடித்த ‘டூட்’ படம் ரிலீஸ்?
பிரதீப் நடித்து வெளியாகும் ‘டூட்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டூட் (Dude) படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு ‘டூட்’ படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடுகிறது.
‘கோமாளி’ படத்தை இயக்கி ரவி மோகனுக்கு ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து தனது இயக்கத்தில் தானே ஹீரோவாக நடித்து ‘லவ் டுடே’ படத்தைக் கொடுத்தார். அந்த படமே 100 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘டிராகன்’ திரைப்படம் 150 கோடி வசூலை கடந்தது. இந்த ஆண்டு சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படமே 150 கோடி வசூலை தாண்டுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘டூட்’ படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் ‘வேட்டைக் கருப்பு’ எனக் கூறப்படும் ‘சூர்யா 45’ படம் தீபாவளிக்கு வெளியாகுமா? அல்லது கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படம் வெளியாகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், சில படங்களும் தீபாவளி போட்டியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிரதீப் நடித்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இதனால் இப்படம் இந்த ஆண்டு முன்னதாக வெளியாகுமா? அல்லது அடுத்த ஆண்டு தான் வெளியாகுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. இதற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் பதில் தர வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், கையில் தாலியுடன் மிரட்டலான லுக்கில் பிரதீப் ‘டூட்’ போஸ்டர் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
