ஜெயம் ரவியின் ‘பிரதர்’ படத்திற்கு இப்படி பிரச்சினையா?

அக்கா-தம்பி இடையேயான பாச உணர்வை மிக நெகிழ்ச்சியாய் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’ படம். குடும்பங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு புரோமோசன் பணிகள் சிறப்பில்லை என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் பார்க்கலாம்..
ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஸ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் பூமிகா, நட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள மக்கா மிஷி பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது.
ஆனால் படத்தின் புரோமோசன் பணிகள் என்பது கவனிக்கத் தகுந்த அளவுக்கு இல்லை என்ற பேச்சு அடிபடுகின்றது.
முன்னதாக, ‘பிரதர்’ படத்தின் இசை வெளியீடு கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், படத்தில் இடம் பெற்றுள்ள படலான மாக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவியுடன் இணைந்து நடனமாடினார்.
‘பிரதர்’ படம் குறித்து ஜெயம் ரவி கூறுகையில்,..’பிரதர்’ படம், எனது சொந்த வாழ்க்கையுடன் ரொம்பவே கனெட்க் ஆகக் கூடிய படம்தான். படத்தில் உள்ள காட்சிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது. எனது அக்காவுக்கு ஒரு பழக்கம் உள்ளது.
அதாவது எனக்கும் எனது அக்காவுக்கும் இடையில் சிறு பிரச்னை ஏற்பட்டுவிட்டால், அல்லது அக்காவை நான் தவறாக புரிந்து கொண்டால், கொஞ்ச நாள் பேசிக்க மாட்டோம். ஆனால், அக்கா தான் சொல்ல நினைப்பதை பொறுமையாக கடிதமாக எழுதி கொடுப்பார்’ என்றார்.
அதேபோல், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது இயக்குநர் ராஜேஸ் பேசும்போது..’ எனக்கு நிஜ வாழ்க்கையில் உடன் பிறந்த அக்காவோ தங்கையோ இல்லை. ஆனால், எனக்கு உறவு முறைகளில் பழக்க வழக்கங்களில் அக்கா தங்கைகள் உள்ளனர்.
இந்தப் படம் நான் எடுக்க காரணமே, இந்தப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் படம் பார்த்த பின்னர், தங்களது அக்காவுக்கு போன் செய்து பேசவேண்டும், அவர்களுடன் நேரம் செலவழிக்கவேண்டும். அல்லது அக்கா இல்லையே என அழவாவது வேண்டும். இந்தக் காரணத்துக்காகத்தான் இந்தப் படத்தை எடுத்தோம்’ எனப் பேசினார்.
படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் புரோமோசன் என்பது மிகவும் சுத்தமாக இல்லாமல் உள்ளது என்ற பேச்சு திரை உலகில் கிளம்பியுள்ளது. அதாவது பிரதர் படத்தின் புரோமோசனுக்கு பணம் இல்லாமல் படக்குழு திணறுவதாகவும், பேச்சு அடிபடுகின்றது.
மேலும், படத்தின் ட்ரெய்லர் வெளியான பின்னர் மக்கள் மத்தியில் டிரெய்லருக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதைப் பொறுத்துதான் படத்தின் அடுத்தகட்ட புரோமோசன் பணிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
நல்ல ஸ்கிரிப்டுக்கு, எந்த விளம்பரமும் தேவையில்லை; வெல்லும்.!

