Pushpa 2

தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். மேலும், ‘காசேதான் கடவுளடா’ என்ற வாசகமும் நடைமுறை வாழ்க்கையில் பேசப்படுகிறது. இச்சூழலில், தனுஷ் நடிக்கும் ‘குபேரா’ படக்கதை குறித்து இங்கே காண்போம்..

பன்முகத்திறமை வாய்ந்த நடிகர் தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்கள் உள்ளன.

இதில் ‘இட்லி கடை’ படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு படங்களிலும் இயக்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த இரண்டு படங்களுக்கு இடையே சேகர் கமுல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இதன் போஸ்டர்கள், டீஸர் ஆகியவை இணையத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வழக்கமான படமாக இல்லாமல், மாறுபட்டு தெரிவதாக இணையவாசிகள் கருத்து பதிவிட்டுள்ளனர்

தற்போது ‘குபேரா’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான தகவலின்படி, ‘பணத்தைப் பின்தொடர்வதும் அதன் விளைவுகளையும் சுற்றியே கதை நடக்கிறது.

ஒரு பிச்சைக்காரர் ஒரு வியத்தகு மாற்றத்தை சந்திக்கிறார். கதாபாத்திரங்களால் எதிர்கொள்ளப்படும் பேராசை, லட்சியம் மற்றும் தார்மிக சங்கடங்கள் ஆகியவை மூலம் மீட்புக்கான தேடலுக்கு வழிவகுக்கிறது’ என்பதையே படத்தின் கதைக்களமாக எடுக்கப்பட்டு வருகிறது என படக்குழு தெரிவித்திருக்கிறது.

இப்படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘குபேரா’ படம் அனைவரையும் கவர்ந்திழுத்து பாக்ஸ் ஆபீஸில் குபேரனாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.!

actor dhanush in kubera movie story
actor dhanush in kubera movie story