ப்ரியா, கீர்த்தி சுரேஷ் இருவரும் லைஃப் & வைஃப் லெசன்: இயக்குனர் அட்லீ கமெண்ட்ஸ்..
அட்லி தயாரித்த ‘பேபி ஜான்’ பட புரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இச்சூழலில் நிகழ்ந்த வைரல் சீன்ஸ் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற அட்லீ, தற்போது இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியுள்ளார்.
இவர் இயக்கி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் வசூல் ரூபாய் 1,000 கோடிகளைக் கடந்ததால், இந்திய அளவில் பெரும் கவனம் ஈர்த்தார். இதுமட்டும் இல்லாமல், தான் தமிழில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோரது நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தினை இயக்கினார். இது இவரது 2-வது படம். இப்படத்தினை தற்போது இந்தி ரீமேக்கில் தயாரித்துள்ளார்.
படத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். படம், கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் புரோமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இச்சூழலில் தனது திருமணத்தை கடந்த வாரத்தில் செய்து கொண்ட, கீர்த்தி சுரேஷ் ஹனிமூனுக்கு எல்லாம் போகாமல், படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டு செயல்பட்டு வருகின்றார். இந்த புரோமோசனில், அட்லீயும் அட்லீயின் மனைவியும் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், புரோமோசனின்போது,அட்லீயின் மனைவி ப்ரியாவும், கீர்த்தியும் எங்களை புகைப்படம் எடுக்கும்படி கூறிவிட்டு, போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
இவர்களை புகைப்படம் எடுக்காமல், அட்லீ வீடியோ எடுத்து விட்டார். தான் புகைப்படம் எடுத்துவிட்டதாகக் கூறி காண்பிக்கின்றார். இதனைப் பார்த்த கீர்த்தி, போட்டோ எடுக்கச் சொன்னா, வீடியோ எடுத்து வெச்சு இருக்க? என கேட்கின்றார்.
இவ்வாறு நடக்கின்ற நிகழ்வுகளை தனது மொபைலில், வீடியோ எடுத்த நடிகர் வருண் தவான், அட்லீயிடம், ‘அட்லீ சார் நீங்க, பெரிய இயக்குநர். அப்படி இருக்கும்போது நீங்க ஏன் இப்படி போட்டோகிராபர் போல ஏன் போட்டோ எல்லாம் எடுத்துட்டு இருக்கீங்க? எனக் கேட்க.
அதற்கு உடனே அட்லீ துளியும் யோசிக்காமல், ‘லைஃப் சார்.. லைஃப் லெசன்ஸ்.. எனக் கூறினார். உடனே வருண் தவான், லைஃபா? இல்லை வைஃபா? எனக் கேள்வி கேட்க, உடனே அதற்கும், வைஃப் லெசன் சார்’ என பதில் அளித்தார். இந்த சுவாராஸ்ய நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாய் தெறிக்கிறது.