thala 60
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய செய்தி வெளியே கசிந்துள்ளது.

Actor ajith character of thala 60 update – நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்குப் பின் வினோத் இயக்கத்தில் அஜீத் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது மட்டுமே வெளியான செய்தியாகும். இந்நிலையில், தற்போது இப்படத்தில் அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிய செய்தி வெளியே கசிந்துள்ளது.

தல 60-ல் அஜித்தின் லுக் இது தானா? – இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

இப்படத்தில் அஜித் முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாகவும் நடிக்கிறாராம். இப்பபடத்தில் இடாம் பெற்றிருக்கும் பிளாஷ்பேக் காட்சிகளை வினோத் கூறும்போது அஜித் மிகவும் ரசித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதில் ஏராளமான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது இப்படமும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் கொண்ட படமாக உருவாகவுள்ளதாம்.

எனவே, கண்டிப்பாக இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என தெரிகிறது. இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய செய்தி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.