30 ஆண்டுக்கு முன் ரஜினியும் நானும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர்.
ஆக.14-ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அமிர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அவர், 30 வருடத்துக்கு முன் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை தற்போது பகிர்ந்துகொண்டார் இது வைரலாகி வருகிறது.
‘நான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய புதிதில், அதாவது 30 வருடத்துக்கு முன், ‘ஆதங்க் ஹி ஆதங்க்’ என்ற படத்தில் ரஜினியுடன் நடித்தேன். அது ஹாலிவுட்டில் வெளியான ‘காட்ஃபாதர்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். அது சரியாகப் போகவில்லை.
இப்போது லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ படத்துக்காக என்னை அணுகியபோது, ரஜினி சார் பெயரைக் கேட்டதுமே உடனடியாக சம்மதித்தேன்.
ஏனென்றால், நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவரை மிகவும் நேசிக்கிறேன். அந்தப் படத்தில் என் கதாபாத்திரம் பற்றி அதிகம் சொல்ல முடியாது. முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன்’ என்றார்.
