நண்பர் சிம்புவுக்கு, மிர்ச்சி சிவா வைத்த கோரிக்கை; என்ன தெரியுமா?

ராம் இயக்கத்தில் வெளியான’பறந்து போ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் மிர்ச்சி சிவா. இப்படம் குறித்தும் தன்னுடைய நண்பர் சிம்புவின் திருமணம் குறித்தும் மிர்ச்சி சிவா பேசியுள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில்,
‘அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் நடிக்கவுள்ளேன். எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பறந்து போ’ எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். 18 வருடங்களாக இயக்குனர் ராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது தற்போது நிறைவேறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பினை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என தெரிவித்தார்.
இதே இடத்தில் நண்பர் சிம்புவுக்கு கோரிக்கை ஒன்று வைக்கிறேன். சீக்கிரம் எல்லோருக்கும் திருமண பத்திரிக்கை கொடுங்கள்’ என கூறியுள்ளார். சிம்புவின் திருமணம் குறித்து, மிர்ச்சி சிவா அளித்துள்ள கலகலப்பான பதில் பலரையும் கவர்ந்து வருகிறது.
சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். வடசென்னையை கதைக்களமாக கொண்டு வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்துக்காக மிரட்டலான ப்ரொமோ வீடியோ ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். விரைவில் இந்த அறிமுக வீடியோ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘ எஸ்டிஆர் 49 ‘ படத்தினை தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50-வது பான் இந்தியா படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.
