இதற்கு பிறகு, என்னால் வேறு எதுவும் செய்ய இல்லை: அமீர்கான் ஓபன் டாக்..

Web Ads

‘மகாபாரதம்’ தனது கடைசிப் படமாக இருக்கும் என்ற அமீர்கான், மேலும் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்..

அமீர்கான் தற்போது ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் விளம்பரத்தில் ஈடுபட்டுள்ளார். இப்படம் ஜுன் 20-ந்தேதி ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து ‘மகாபாரதம்’ படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது மிகப்பெரிய புராஜெக்டாக இருப்பதால், இதுவே தனது கடைசிப் படமாகவும் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். இது பற்றித் தெரிவிக்கையில், ‘இது பல அடுக்குகளைக் கொண்டது, உணர்ச்சிமயமானது, பிரம்மாண்டமானது, உலகில் நீங்கள் காணும் அனைத்தும் மகாபாரதத்தில் உங்களுக்குக் கிடைக்கும்’ என கூறினார்.

அமீர்கான் தற்போது ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கடைசிப் படம் என்ற தகவல் குறித்து கேட்டபோது, மகாபாரதம் படம் செய்த பிறகு, எனக்கு வேறு எதுவும் செய்ய இல்லை என நினைக்கிறேன். இந்தப் படத்தின் உள்ளடக்கம் அப்படித்தான் இருக்கும் என்பதால், இதற்குப் பிறகு நான் எதுவும் செய்ய முடியாது.

நான் வேலை செய்து கொண்டே இறக்க விரும்புகிறேன். ஆனால், நீங்கள் கேட்கிறீர்கள் என்பதால், இதைத்தான் நான் யோசிக்க முடியும். இதற்குப் பிறகு எனக்கு வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என நினைக்கிறேன்’ என்றார்.

aamir khan hints at retirement after mahabharata film
aamir khan hints at retirement after mahabharata film