Aadhi Pinisetty says No to Ponniyin Selvan | The shooting of the film will begin later this year. | Kollywood | Tamil CInema | Manirathnam | Vikram

Aadhi Pinisetty says No to Ponniyin Selvan :

மிருகம் ஆதியிடமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!

இவர்கள் போக மிருகம் ஆதியிடமும் இப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். ஆனால் கால்ஷீட் காரணமாக இப்படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் இப்படத்தை லைக்காவுக்கு பதில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில்தான் உள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.