ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நயன்தாரா!

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடிகை நயன்தாரா இப்படத்தில் இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்கின்றனர்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களையும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான திரை அனுபவம், விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் எனப் பல்வேறு அம்சங்களுடன் ‘தர்மன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது படப்பிடிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Web Ad 2

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’, திரையரங்குகளில் பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.