‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் புதிய பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Web Ads

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் ஜூலை 23-ஆம் தேதி சூர்யா தனது 51-வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதையொட்டி வெளியாகவுள்ள புதிய பாடல் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடலின் வெளியீட்டு தேதி மற்றும் பிற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.