‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் எளிய பூஜையுடன் நடிகர் ஏகன் படத்தின் டப்பிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
தயாரிப்பாளர்கள் கூறியதாவது, படப்பிடிப்பின் ஒவ்வொரு கட்டமும் திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவடைந்துள்ளதாகவும், அதே உற்சாகத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தை ரசிகர்களிடம் கொண்டு வர முழு வீச்சில் பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்ய, சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே, ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
