யோகி பாபுவின் “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” பட பூஜை விழா!

Web Ads

Kaviya Productions மற்றும் S2 Movies இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விளையாட்டை மையமாகக் கொண்ட நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.

இந்தப் படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலட்சுமி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை கே. ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளராக பி. மஞ்சுநாத் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை அச்சு ராஜாமணி அல்லாது இசையமைப்பாளராக அச்சு ராஜாமணி பணியாற்ற, ஒளிப்பதிவை ஷிஹாப் பட்டாம்பி மேற்கொள்கிறார். எஸ்.பி. அகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

விழாவில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இயக்குநர் செந்தில்நாதன் பேசும்போது, விளையாட்டு பின்னணியில் உருவாகும் இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், முழு குழுவின் ஒத்துழைப்பால் படம் சிறப்பாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் மெல்வின், அமித் பார்கவ், யாஷிகா ஆனந்த், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து, படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவில் பேசிய பலரும், இப்படம் இன்றைய தமிழ் சினிமாவுக்கு தேவையான விளையாட்டு சார்ந்த ஆரோக்கியமான கதைக்களத்துடன் உருவாகி வருவதாகவும், மாபெரும் வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

படக்குழு தெரிவித்ததாவது, ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்த மேலும் பல அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.