நடிகை ராதிகா பதிவுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி..

Web Ads

ராதிகா சரத்குமார் தன் அப்பா எம்.ஆர். ராதா பட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். எம்.ஆர். ராதா கேட்ட கேள்வி: #mrradha என்று மட்டும் குறிப்பிட்டு ராதிகா வெளியிட்ட அந்த வீடியோவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியிருப்பதாவது,

நீ இருந்த இருப்பென்ன, வாழ்ந்த வாழ்வென்ன. உன் பங்களா வாசல்ல எத்தனை கூர்கா. இந்த படம் எடுக்கிற எல்லாம் தயாரிப்பாளர் கிட்டயும் பணத்த வாங்கிட்டு கால்சீட் குடுத்திட்டு கொடைக்கானல் சீசனுக்கு போய்டுவியே. நீ வாயை திறந்து என்ன சொல்லுவனு இந்த பேப்பர்காரன்கள் க்யூ சிஸ்டம்ல இருப்பாங்களே. உன் கண்ணழகு காலழகு வர்ணிக்க எத்தனை மைனர்ங்க. நீ கோணலா குடுக்கிற போஸ் எல்லாம் உயர்ந்த போஸ்னு இந்த ஸ்டில் போட்டோகிராஃபர்கள் எடுத்துக்கிட்டே இருப்பாங்களே.

நீ நடிக்கிற படத்தை தான் பார்ப்பேனு இந்த புரியாத ஜனங்க ரொம்ப பேர் இருந்துகிட்டு இருந்தாங்களே. இப்ப உன் மூஞ்ச யாராவது பார்ப்பாங்களா’ என பேசியுள்ளதை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ‘தவெக விஜய்க்கு தான் இந்த வீடியோ போட்டிருக்கிறார் ராதிகா. சரியான நேரத்தில் சரியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்துவிட்டாவது ஒரு சிலர் வாழ்க்கையை தொலைக்காமல் தங்களையும், தங்களின் குடும்பத்தாரையும் நினைத்து செயல்பட வேண்டும். சித்தி இப்படி ஒரே அடியா அடிப்பாங்கனு சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. மறைமுகமாக எல்லாம் இல்லை, நேரடியாகவே பொளந்திருக்கிறார் ராதிகா என தெரிவித்துள்ளனர்.

அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, விஜய்ணாவுக்கு அம்மாவாக நடித்தவர் இவர். இந்த மூஞ்சிய யாராச்சும் பார்ப்பார்களா என்கிற விமர்சனம்லாம் அவர் ஏற்கனவே பார்த்துவிட்டார். இந்த சர்ச்சையை தாண்டி மீண்டும் வருவார் விஜய்ணா. அப்பொழுது நீங்கள் எல்லாம் உங்களின் மூஞ்சிய எங்க போய் வச்சுப்பீங்க என கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே சிலரோ எம்.ஆர். ராதா ஒரு தீர்க்கதரிசி. இன்று நடந்த சம்பவத்தை அன்றே கணித்து வசனம் பேசியிருக்கிறார் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

கரூரில் நடந்த துயரத்தை அடுத்து விஜய்க்கு எதிராக சிலரும், ஆதரவாக தவெகவினரும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே விஜய் ஏன் கரூருக்கு 7 மணிநேரம் தாமதமாக வந்தார் என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 5 நிமிடம் கூட லேட்டாக வருவது பிடிக்காது என்று சொன்னவர் தானே விஜய். இப்போ 7 மணிநேரம் லேட்டாக வந்தது மட்டும் சரியா எனவும் கேட்கிறார்கள்.

radhika sarathkumar posts a video viral
radhika sarathkumar posts a video viral