Web Ads

‘ட்யூட்’ படத்திற்கு வழிவிட்டது ‘எல்ஐகே’ படக்குழு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் ‘ட்யூட்’ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக அமைய வாழ்த்துகிறோம்.

எங்கள் படத்துக்கு வழிவிட்டு வேறொரு தேதியில் ‘ட்யூட்’ படத்தை ரிலீஸ் செய்யச்சொல்லி மைத்ரி மூவிஸ் நிறுவனத்திடம் பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது பலனளிக்கவில்லை.

மேலும், தற்போது திரைப்படத்துறை மற்றும் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் கொண்டு, இரண்டு படங்களின் வசூலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். எனவே அன்பின் அடையாளமாக, எங்கள் திரைப்படத்தை 2025 டிசம்பர் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களைத் தேடி வரவிருக்கின்றன. மனமார்ந்த நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகிபாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எல்.ஐ.கே’. லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

pradeep ranganathan lik movie postponed
pradeep ranganathan lik movie postponed