ஹன்சிகாவை தொடர்ந்து ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம்..

Web Ads

தனுஷ், ராஷ்மிகா நடிப்பில் ‘குபேரா’ படம் தமிழை விட தெலுங்கில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படம் ‘மைசா’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதையான இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்குகிறார். அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். குறிப்பாக, பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரும் ஜாக்கி சான் படங்களில் பணியாற்றியவருமான ஆன்டி லாங் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார்.

இவர் பிரபாஸ் நடித்த ‘கல்கி2898 ஏடி’ மற்றும் சில இந்தி படங்களிலும் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் தொடக்க விழா பூஜை ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர் ராமாநாயுடு கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். ராஷ்மிகா மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படம் பற்றி இயக்குநர் ரவீந்திர புள்ளே தெரிவிக்கையில், ‘இதன் கதை, கதாபாத்திரங்கள், கலை நுணுக்கம் என அனைத்தும் ரசிகர்களைக் கவரும். கோண்ட் பழங்குடியினரின் சுவாரஸ்யமான உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான ஆக்‌ஷன் த்ரில்லர் படம்’ என்றார். அவ்வகையில், ‘காந்தாரி’ பட ஹன்சிகாவை தொடர்ந்து, ராஷ்மிகாவும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

action movie from hansika and rashmika mandanna act
action movie from hansika and rashmika mandanna act