வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, அரங்குகள் அமைக்கும் பணி..

Web Ads

வாடிவாசல் படம்போல, வடசென்னை படமும் கேள்விக்குறி ஆகிறதா? என பார்ப்போம்..

‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அது வதந்தி என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இணையத்தில் பரவும் வதந்தியில் உண்மையில்லை என்கிறார்கள். ஆனால், சிம்பு சம்பளம் அதிகமாக கேட்பதால் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது சுமூகமாக முடிந்தால் இப்படம் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

Web Ad 2

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே முடிவுக்கு வரும். தற்போதைக்கு சிம்புவை வைத்து படமாக்கப்பட்டுள்ள அறிமுக வீடியோவின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதனை வெளியிட்டால் வதந்திகளுக்கு வழியில்லை.

vetrimaaran and simbu in vadachennai movie update
vetrimaaran and simbu in vadachennai movie update