என் அப்பா பற்றி ரஜினி கூறிய விஷயம்: ஸ்ருதிஹாசன் வாய்ஸ், வைரல்

Web Ads

‘தனது அப்பாவை பற்றி ரஜினி கூறிய தகவல்கள்’ என ஸ்ருதி பெருமிதம் அடைந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.

முதன்முறையாக அமீர்கான் இந்தப் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் சத்யராஜ் பல வருடங்கள் கழித்தும், கமலின் மகள் ஸ்ருதி முதன் முறையாகவும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கூலி படத்தில் நடித்தது தொடர்பாக ஸ்ருதி தெரிவிக்கையில், ‘கூலி படத்தில் நடித்ததன் மூலம் அவருடன் முதன்முறையாக நடித்திருக்கிறேன். அதை நினைக்கையில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

அப்பாவுக்கும் அவருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவரை பற்றி தெரிந்துகொள்ளும் பாக்கியம் இந்தப் படத்தால் கிடைத்தது. அவர் நிறைய நல்ல விஷயங்கள் சேர்ந்த மனிதர். அவ்வளவு எளிமையாக இருப்பார். அதேசமயம் பயங்கர ஷார்ப்பாக இருப்பார். முக்கியமாக அனைவரிடமுமே கனிவாகத்தான் நடந்துகொள்வார்.

என்னுடைய அப்பா பற்றி பல விஷயங்களை ‘கூலி’ செட்டில் அவர் பேசியிருக்கிறார்.
முக்கியமாக எனது அப்பா செய்த உதவிகள் குறித்தும், அப்பாவை குறித்தும் உயர்வாகத்தான் பேசுவார்’ என்றார். தற்போது ஸ்ருதி கூறிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kamal daughter shruthi haasan open talks about rajinikanth