நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு
ரன்யா ராவ், தமிழில் ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர். தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், டிஜிபி-யின் வளர்ப்பு மகள் ஆவார்.
இவரது இரு நண்பர்கள் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், ரன்யா ராவ், அவரது நண்பர்களான நடிகர் தருண் மற்றும் சாஹில் ஜெயின் ஆகியோர் ஒரு வருடம் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்க நேரிடும்.
கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 14.1 கிலோ தங்கத்தை கடத்த முயன்றபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், ரூ.43 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளைக் கடத்தியது தெரியவந்தது. இந்தக் கடத்தலுக்கு உதவியதாக அவரது நண்பர் தருண் மற்றும் பெல்லாரி நகை வியாபாரி சாஹில் ஜெயின் ஆகியோர் மீது காஃபிபோசா சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரன்யாவை கடந்த 4 மாதங்களில் சுமார் ரூ.38.39 கோடியை ஹவாலா மூலம் துபாய்க்கு அனுப்பி 49.6 கிலோ தங்கம் வாங்கியுள்ளார் அவரது நண்பர் சாஹில் ஜெயின். அதை பெங்களூருக்குக் கொண்டு வந்து சாஹில் ஜெயின் விற்பனை செய்ததும் டிஆர்ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
தான் துபாய்க்கு ரூ.38.39 கோடி ஹவாலா பணத்தை அனுப்ப ரன்யாவுக்கு உதவியதாகவும், பெங்களூருவில் 5 தவணைகளாக அவருக்கு ரூ.1.7 கோடியை ஹவாலா மூலம் வழங்கியதாகவும் சாஹில் ஜெயின் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தத் தகவலை டிஆர்ஐ நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்கள் மூவர் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

