சிறுவர்களுடன் ஃபுட்பால் விளையாடியுள்ள வீடியோவை நடிகர் யோகி பாபு பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருவது மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படி பிசியான நடிகராக திகழும் யோகி பாபு சினிமாவை தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்று அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் அவ்வப்போது கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கங்கள் பதிவிட்டு வரும் யோகி பாபு தற்போது சிறுவர்களுடன் ஃபுட்பால் விளையாடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு அவரது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து கமெண்ட்கள் மற்றும் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.