Yogi Babu Tweet

Yogi Babu Tweet : ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு வெறியேற்றியுள்ளார் யோகி பாபு.

தளபதி விஜய் தற்போது முன்னணி இயக்குனரான அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ரசிகர்கள் எக்கசக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி என பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் அப்டேட் ஏதாவது வராதா என ரசிகர்கள் அனைவரும் ஏங்கி கொண்டிருக்கும் வேளையில் யோகி பாபு, கதிர் மற்றும் சிலர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் யோகி பாபு.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் தளபதி 63-யா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது தளபதி 63 இல்லை என கதிர் யோகி பாபு சேர்ந்து நடித்து வரும் ஜடா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என தெரிந்ததும் கொஞ்சம் வருத்தப்பட்டுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.