PattiPulam yogi babu

PattiPulam : சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படம் “பட்டிபுலம்”. இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மற்றொரு நாயகனாக வீரசமர் நடிக்க கதா நாயகியாக தற்காப்பு என்ற படத்தில் நடித்த அமிதாராவ் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சேரன் ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய வல்லவன் இசையமைத்துள்ளார். ஆர்.ஜி.ஆனந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கலை : வீரசமர்

நடனம் : விஜய் ரக்‌ஷித்

ஸ்டண்ட் : மகேஷ்

பாடல்கள் : மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத்

தயாரிப்பு மேற்பார்வை : அயன்புரம் ராஜு

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ்.

படம் பற்றி இயக்குனர் சுரேஷிடம் கேட்டதற்கு அவர் சில சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவை இதோ உங்களுகாக

நான் ஷக்திசிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால் மக்களின் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன்.

அந்த பார்முலா படி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்திக் கொண்டேன். ஐந்து நிமிஷம் பத்து நிமிஷம் இல்லை ..படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார்.. அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப் படுத்தி உள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு..அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும் அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது? இதனால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது? என்பதை அலசுவது இப்படத்தின் கதை. இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது என்றார்.

PattiPulam

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.