Yogi Babu

Yogi Babu Home : யோகி பாபுவின் புது வீடு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர் படங்கள் வரை அனைத்திலும் யோகி பாபு கலக்கி வருகிறார்.

சமீபத்தில் கூட படங்களில் நடிப்பதற்காக ஒரு நாள் சம்பளத்தை யோகி பாபு உயர்த்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகையான ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவின் புதிய வீட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வீடு பார்ப்பதற்கே மிக பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.