Yogi Babu Contribute to Naye Paye Movie

ஒரே நாளைக்கு ரூபாய் 10 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு ஒரு ரூபாய் கூட வாங்காமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்.

Yogi Babu Contribute to Naye Paye Movie : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. அறிமுக நடிகர்கள் முதல் டாப் ஹீரோக்கள் வரை அனைவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். யோகி பாபு மார்க்கெட் கிடுகிடுவென உயர்வு உச்சத்தைத் தொட்ட நிலையில் தற்போது ஒரு நாளைக்கு ரூபாய் 10 லட்சம் என சம்பளம் வாங்கி வருகிறார்.

இவர் சக்தி வாசன் என்பவரின் இயக்கத்தில் நாயே பேயே என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனால் முருகதாஸ் என்பவர் இந்த படத்தில் நடித்தார்.

படத்தில் நடிக்க கமிட்டாகி நடிக்க முடியாமல் போனதால் யோகி பாபு இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சம்பளமே வாங்காமல் நடனமாடியுள்ளார். இந்த தகவல் தெரிவித்து வெளியாகி பலரையும் பாராட்ட வைத்து வருகிறது. ‌‌