விஜய் நடிக்க இருந்து கைவிடப்பட்ட யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை கவுதம் மேனன் மீண்டும் இயக்கி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் யோகன் அத்தியாயம் ஒன்று.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பின்னர் இப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது கவுதம் மேனன் மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்துள்ளாராம்.
ஆனால் ஹீரோவாக விஜய் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பப்பி படத்தில் ஹீரோவாக நடித்த வருண் நடித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.