World Wide Badminton

World Wide Badminton : உலகளவில் நம்பர்-4 வீராங்கனையும், நடப்பு சாபியனுமான சிந்து சீனாவின் முதன் முறையாக நடக்கவுள்ள ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடருக்கு தயாராக போகாதாக தெரிவித்து, மற்றும் நடக்கவிருக்க சையது மோடி பாட்மின்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து, இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன் ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

இந்திய ஓபன், தாய்லாந்து ஓபனில் பைனல் வரை சென்ற இவர், ‘ஆல் இங்கிலாந்து ஓபனில்’ அரையிறுதி உடன் திருபினார்.

மேலும் “வேர்ல்டு டூர் பைனல்ஸ்” தொடர், இந்த ஆண்டு சிந்து பங்கேற்கவுள்ள 18-வது தொடர்.இவர், இத்தொடரில் 3-வது முறையாக பங்கேற்க்க உள்ளார்.

கடந்த 2016-ல் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். அடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் இறுதி போட்டி வரை சென்றார்.

இந்த ஆண்டு வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக பயிற்சி எடுக்க இருப்பதால் நடக்க இருக்கும் சையது மோடி பாட்மின்டன் போட்டி தொடரில் இருந்து விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here