ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும், ராஷ்மிகா மந்தனா வேண்டுகோள்..
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.
இபபடம் பெண்களுக்கு எதிரானது. ஆணாதிக்க சிந்தனை படம் முழுவதும் விரவி இருக்கிறது. அதிக வன்முறையை கொண்ட படம் என பலவாறு கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆயினும் இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், இப்படம் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கூறும்போது, ‘ஒரு படத்தில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களையும் புகைப்பிடிக்கத் தூண்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், சமூகத்தில் புகைப்பிடிப்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
தனிப்பட்ட முறையில் நான் திரைப்படங்களில் புகைப்பிடிக்க மாட்டேன். நான் ‘அனிமல்’ படத்தில் நடித்திருப்பதால், ஒரு திரைப்படத்தை படமாகப் பாருங்கள் என்றுதான் கூறுவேன்.
நான் ஒருபோதும் படம் பார்த்து பாதிப்படைய மாட்டேன். அப்படி நினைத்தால் அது போன்ற படங்களை பார்க்க வேண்டாம். ஒரு படத்தைப் பாருங்கள் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘கிரே’ கேரக்டர் இருக்கிறது. அப்படிப்பட்ட கேரக்டரை தான் ‘அனிமல்’ படத்தில் சந்தீப் ரெட்டி வங்கா காண்பித்திருந்தார்.
அவ்வகையில், அந்தப் படத்தை மக்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. யாராக இருந்தாலும் படத்தை படமாக பாருங்கள்’ என்றார்.
