‘தக் லைஃப்’ படம் இன்றுமுதல் ஓடிடி.யில் ரிலீஸ்..
மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படம், தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான நாளில் முதல் காட்சியிலிருந்தே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை சந்தித்தது.
சுமார் 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் ரூ.97.44 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.56.24 கோடி வசூல் செய்திருந்தது. தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் மட்டுமே ரிலீஸ் ஆன இப்படம் மொழி பிரச்சனை காரணமாக கன்னடத்தில் ரிலீஸ் செய்யப்படவில்லை. இதனால் படக்குழுவுக்கு 30 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் தியேட்டரில் ரிலீஸாகி 28 நாட்கள் ஆகும் நிலையில், இன்று முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தக் லைஃப் திரைப்படம் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் ஸ்ட்ரீம் ஆகிறது.
சமீப காலமாக தியேட்டரில் தோல்வி அடைந்த படங்கள் சில ஓடிடியில் வெளியான பின்னர் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதுண்டு. அவ்வகையில் தக் லைஃப் படத்திற்கு ஓடிடியில் பாசிடிவ் விமர்சனம் கிடைக்கிறதா? நெகடிவ் விமர்சனம் கிடைக்கிறதா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
