வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் சிம்பு மற்றும் கௌதம் மேனனுக்கு பரிசளித்ததை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசாரி கணேஷ் கூல் சுரேஷ் இருக்கும் பரிசு வழங்கி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது.

சிம்பு, கௌதம் மேனனை தொடர்ந்து கூல் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட பரிசு!!… என்ன தெரியுமா??

தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த படம் ஏழு நாள் முடிவில் ரூபாய் 52 கோடி வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க செல்வதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக VTK தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் சிம்புவிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சிம்பு, கௌதம் மேனனை தொடர்ந்து கூல் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட பரிசு!!… என்ன தெரியுமா??

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான கௌதம் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கை பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்ததை தொடர்ந்து. வெந்து தணிந்தது காடு பட வெற்றிக்காக கூல் சுரேசுக்கு விலை உயர்ந்த போன் ஒன்றை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசாக அளித்துள்ளார். இப்படத்தை அதிக அளவில் பிரமோஷன் செய்து பிரபலமான இவருக்கு படக்குழு பரிசளித்து கௌரவித்ததை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சிம்பு, கௌதம் மேனனை தொடர்ந்து கூல் சுரேஷ்க்கு வழங்கப்பட்ட பரிசு!!… என்ன தெரியுமா??