நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, பகிர்ந்துள்ள பேட்டி வைரல்.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

ரஜினியின் முன்னிலையில் சிம்புவுடன் திருமணமா?? ஏம்மா கற்பனைக்கு ஒரு அளவில்லையா!! சிம்பு பட நடிகையின் பேட்டி வைரல்!.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் கதாநாயகியான சித்தி இட்னானி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி தற்பொழுது வைரலாகி வருகிறது.

ரஜினியின் முன்னிலையில் சிம்புவுடன் திருமணமா?? ஏம்மா கற்பனைக்கு ஒரு அளவில்லையா!! சிம்பு பட நடிகையின் பேட்டி வைரல்!.

அதாவது அப்பேட்டியில் அவரிடம் கற்பனை கதை ஏதாவது கூறுமாறு அப்பேட்டியாளர் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் சித்தி இட்னானி, “எனது கற்பனை கதையில் சிம்புவும் நானும் பள்ளிப்பருவ காதலர்கள். எனது தந்தையாக ரஜினிகாந்த் இருக்கவேண்டும், சிம்புவின் அண்ணனாக உதயநிதி இருக்க வேண்டும். இறுதியில் ரஜினியும், உதயநிதி ஸ்டாலினும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வைத்தால் நன்றாக இருக்கும் என கலகலப்பாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த சுவாரசியமான பேட்டி தற்பொழுது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.