தொகுப்பாளினி பிரியங்கா நடிகையாக விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.

VJ Priyanka As Actress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் பிரியங்கா.

ஆங்கர் டூ ஆக்டராக மாறிய பிக் பாஸ் பிரியங்கா.. அதுவும் யாருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் தெரியுமா?? வைரலாகும் போட்டோ

சிறந்த தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்காமல் இருந்து வரும் இவர் மிர்ச்சி செந்தில் உடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்துள்ளார்.

ஆங்கர் டூ ஆக்டராக மாறிய பிக் பாஸ் பிரியங்கா.. அதுவும் யாருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் தெரியுமா?? வைரலாகும் போட்டோ

இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தான் விளம்பரப் படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்துள்ளார் செந்தில். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CchUJMEPiEN/?igshid=YmMyMTA2M2Y=