கணவருடன் கார் விபத்தில் சிக்கியுள்ளார் மணிமேகலை.

VJ Manimegalai in Car Accident : தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மணிமேகலை. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு.!

2021-ல் யார் முகத்துல முழிச்சேனோ.. கார் விபத்தில் சிக்கிய மணிமேகலை - ரசிகர்கள் அதிர்ச்சி.!!

மேலும் இவர் நடன கலைஞர் உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

பைக்கில் உலகம் சுற்ற தயாராகும் Thala Ajith – சாகசப் பெண்ணிடம் ஆலோசனை! | Valimai

சமீபத்தில் இவர்கள் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியிருந்தனர். இந்த நிலையில் இருவரும் சமீபத்தில் பழைய கார் ஒன்றில் அவுட்டிங் சென்றிருந்தனர். மணிமேகலை தான் காரை ஒட்டிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இவர்களின் கார் மீது லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய இருவரும் எந்தவித காயமும் இன்றி தப்பியுள்ளனர். இதுகுறித்து மணிமேகலை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் 2021ல் யாருடைய முகத்தில் முழித்தேனோ என புலம்பியுள்ளார்.