VJ Manimegalai Birthday Celebration
VJ Manimegalai Birthday Celebration

கிராமத்தில் தான் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.

VJ Manimegalai Birthday Celebration : தமிழ் சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் சேனலில் பணியாற்றி வந்த இவர் தற்போது விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் நடன இயக்குனர் இசையினை காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் ஊரடங்கு உத்தரவால் சென்னை திரும்ப முடியாமல் அங்கேயே இருந்து வருகின்றனர்.

சொந்த நிலத்தில் விவசாயியான தமிழ் நடிகை – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து தினமும் ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

தற்போது மணிமேகலைக்கு பிறந்தநாள என்பதால் அவருடைய கணவர் மற்றும் அக்கிராமத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாஸாக அவருடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர்.

அந்த வீடியோவை மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் மணிமேகலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.