ஆண்ட்டினு கூப்பிடுறாங்க என வீடியோவில் கொந்தளித்துள்ளார் விஜய் டிவி ஜாக்குலின்.

VJ Jaqquline Angry Video : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் இருப்பவர் ஜாக்குலின். இவர் வெள்ளித்திரையில் நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆண்ட்டினு கூப்பிடறாங்க.. வீடியோவில் கொந்தளித்த விஜய் டிவி ஜாக்லின் - அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தேன்மொழி பிஏ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இணைந்து வரும் இவர் சமீபத்தில் தன்னுடைய தோழி ஒருவருடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் ஜாக்குலின் உடன் இருந்தவர் முடியை ஷார்ட்டாக வைத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனால் பலரும் அவர் ஆணா பெண்ணா உங்க அண்ணனா தம்பியா என் கிண்டல் அடித்துள்ளனர். இதனால் கடுப்பான ஜாக்லின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஒரு பெண் போட்டோகிராபர். அவர் அவருடைய பணத்தில் விருப்பப்படி முடியை வெட்டிக் கொண்டு உள்ளார் அதில் உங்களுக்கு என்ன கஷ்டம் என கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஏனெனில் சிலர் ஆன்ட்டி என கூறி இருந்தீர்கள் என கொந்தளித்து பேசியுள்ளார்.

ஆண்ட்டினு கூப்பிடறாங்க.. வீடியோவில் கொந்தளித்த விஜய் டிவி ஜாக்லின் - அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா?