Viswasam Vivek Look

Viswasam Vivek : பிரபல நடிகரான விவேக்குடன் தல அஜித் இருக்கும் விஸ்வாசம் போஸ்டர் ஒன்று தற்போது முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

தல அஜித் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக், கோவை சரளா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு என பலருடைய போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி விட்டன. ஆனால் விவேக்கின் லுக் மட்டும் இதுநாள் வரை வெளியாகாமல் இருந்து வந்தது.

தற்போது அந்த லுக்கும் வெளியாகியுள்ளது. இதனை தல ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

நேற்று விஸ்வாசம் படத்திற்கு சென்சாரில் எந்த இடத்திலும் கத்தரி போடாமல் U சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம் :

Viswasam Vivek

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.