தல அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாஸ் ஆல்பம், பக்கா BGM, ஆனால் இரட்டை தல தான் சவால் - டி.இம்மானின் வெயிட்டான அப்டேட்ஸ்.!

இந்நிலையில் சமீபத்தில் டி.இம்மான் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் பற்றிய அப்டேட்களை கொடுத்துள்ளார். அது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

அதாவது தல படம் என்றாலே BGM தான் முக்கியம். இந்த படத்துலயும் பக்காவாக BGM தயாராகி வருது. இதுவரைக்கும் இரண்டு பாட்டு ரெடியாகி இருக்கு. மாஸான ஆல்பம் ரசிகர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு தலையா இருந்தா கூட சமாளிக்கலாம். இரண்டு தலைக்கு மியூசிக் போடுறது சவாலாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தல பொங்கலுக்காக ரசிகர்களுடன் சேர்ந்து நானும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.