Viswasam Ajith Review

Viswasam Thala Review : விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். அந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டி.இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஜகபதி பாபு, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இயக்குனர் சிவா படத்தை பார்த்து விட்டு அஜித் கூறியதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அஜித்தும் தயாரிப்பாளர் தியாகராஜன் சாரும் படத்தை பார்த்து விட்டார்கள். அஜித் சிவா இயக்கிய 4 படங்களில் இது பெஸ்ட் என கூறியதாக பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித் இந்த படத்தில் ஒரு பாடளுக்கு நடனமாடியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படத்தில் ஒரே அஜித் தான் . நகரம், கிராமம் என இரண்டு கெட்டப்களில் நடித்துள்ளார். படத்தில் எமோஷன்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

நான் அஜித் சாரின் ஒவ்வொரு படத்தையும் ரசித்து தான் இயக்குவேன். அதே போல் தான் இந்த படத்தையும் மிகவும் ரசித்து இயக்கியுள்ளேன் என கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.