
விஸ்வாசம் 2nd லுக் பின்னாடி ஒரு உத்தி இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் என இதுவரை 2 போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
வெளியான இரண்டு போஸ்டரும் கலவையான விமர்சனங்களை பெற்றது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதை உறுதிபடுத்தி இருந்தனர்.
ஆனால் போஸ்டரில் கிளியாரிட்டி குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
அதே போல இரண்டாவது லுக்கில் ஒரே நபரையே கட் அண்ட் பேஸ்ட் செய்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.
இதற்கெல்லாம் ஒரு காரணம் இருப்பதாகவே கூறப்படுகிறது. விவேகம் படத்திற்கு பர்ஸ்ட் லுக், டீஸர் என அனைத்திற்கு அதிகமான ஹைப் உருவாகி விட்டதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விவேகம் படத்தால் பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் தான் விஸ்வாசம் படத்திற்கு பெரியதாக அலட்டி கொள்ளாமல் சாதாரணமாகவே போஸ்டர்களை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
வீரம் படத்திற்கும் இதே போல் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை சாதரணமாகவே தெரிந்தது. ஆனால் படம் மெகா ஹிட்டாகி இருந்தது.
அதனால் அதே வழியையே தற்போது விஸ்வாசம் படத்திற்கும் சிவா பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் தல ரசிகர்களோ எது எப்படி இருந்தாலும் சரி. எங்களுக்கு படம் மாஸாக கொடுத்தா போதும் என கூறி வருகின்றனர்.