VIswasam Celebration in Maari 2

Viswasam Celebration in Maari 2 : மாரி 2 படத்தில் தல அஜித்தின் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ரசிகர்கள் தியேட்டரில் யார் படம் ஓடினாலும் அங்க ஹீரோ நாங்க தான் என்பது போல பிரபல தியேட்டரையே அதிர வைத்துள்ளனர்.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் விஸ்வாசம் படத்திற்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தல ரசிகர்கள் கோயம்பத்தூரில் உள்ள ஜெயந்தி தியேட்டரில் மேள தாளத்துடன் கொண்டாடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை ரசிகர் மாரி 2 படம் பார்க்க தியேட்டருக்கு போனேன்.. அங்க தல ரசிகர்கள் வேற லெவல் மாஸ் காட்டுறாங்க என கூறி ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.