Viswasam 50th Day Collection

Viswasam 50th Day Collection : 50-வது நாளில் விஸ்வாசம் படத்தின் வசூல் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது அஜித் ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

தல பக்கா ஜென்டில் மேன்- பிரபல நடிகை ஓபன் டாக்.!

இது வரை படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் தொடர் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தியேட்டர்களில் இப்படத்திற்கான 50-வது நாள் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன் மூலம் கிடைத்துள்ள வசூல் மட்டுமே ரூ 1 கோடிக்கும் அதிகம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

50-வது நாளிலும் ரூ 1 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் விஸ்வாசம் திரைப்படம் தட்டி சென்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.