ஜுவாலா கட்டா உடனான திருமண தேதியை அறிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal Marriage Date : தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

ஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் - குவியும் ரசிகர்கள் வாழ்த்து.!!

இறுதியாக இவரும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் இணைந்து நடித்திருந்த காடன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த விஷ்ணு விஷால் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் காதலில் இருந்து வந்தார்.

இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 22ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷ்ணு விஷால் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான விஷ்ணு விஷாலுக்கு ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுவாலா கட்டா உடன் திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் - குவியும் ரசிகர்கள் வாழ்த்து.!!