மதுரை மக்கள் ரெண்டு விஷயத்துல மாறவே மாட்டாங்க: விஷால் ஓபன் டாக்..
மதுரை என்றாலே மல்லிகைப் பூ வாசமும் வரும். பாசமும் பந்தி வைக்கும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விஷால் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
‘செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும். எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன்.
2006-ல் ‘திமிரு’ பட சூட்டிங்கின்போது வந்தேன். 19 வருஷம் கழித்து இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்கக் கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை. 6 மாதத்தில் முடிக்க வேண்டியதை, நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால், 3 வருடம் தாமதமாகி விட்டது. இன்னும் 4 மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும்.
இந்தியா, பாகிஸ்தான் போர் தேவையில்லாதது. இதை தவிர்த்து இருக்கலாம், நம்மளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது.
அதை புரிந்துகொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை. மதுரை மக்கள் இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம், மற்றொன்று உணவு, இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள். நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும்’ என்றார்.
முன்னதாக விஷால், நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்தால் தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற முடிவில் தீர்க்கமாக உள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் சங்கக் கட்டிடம் இன்னும் சில மாதங்களில் திறக்கப்பட உள்ளதால், விஷால் தன்னுடைய திருமணமும் விரைவில் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் விஷால் கூறியுள்ளார்.