விஷால் தன்னுடைய அறக்கட்டளை மூலம் செய்த உதவியால் பல ஏழை எளிய மாணவர்கள் இந்த வருடம் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Vishal Helps to Poor Students : நடிகர் விஷால் அவர்கள் தனது தாயார் பெயரில் தேவி அறக்கட்டளை மூலம் பல உதவிகளைச் செய்வதுடன், வருடம்தோறும் பல மாணவ, மாணவிகளுக்குக் கல்வி படிப்பிற்கு உதவி செய்து வருகிறார்.

விஷாலால் உயர் கல்வி பயிலும் ஏழை மாணவ மாணவிகள்.. செய்த உதவிக்கு குவியும் பாராட்டு.!!

பள்ளிப்படிப்பை முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத வறுமைக்கு உட்பட்ட மற்றும் விவசாய குடும்பங்கள் சார்ந்த மாணவன் மாணவிகளுக்கு உயர்கல்வி வழங்கும் திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் பல மாணவ, மாணவிகளை தனது தேவி அறக்கட்டளை மூலம் படிக்கவைத்து வருகிறார்

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

அதேபோன்று இந்த வருடத்துக்கான மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தின் மூலம் பல மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர். விஷால் மூலம் பயனடைந்த மாணவ மாணவிகள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி

விஷாலின் இந்த கல்வி தொண்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். உங்களது சேவை தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.