விஷால் பிறந்தநாள் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு விளங்கி வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தேவி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். பல நூறு குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறார்.

விஷால் பிறந்த நாளில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. வெளியான போட்டோஸ், குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் விஷாலுக்காக சென்னை மாவட்ட புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் தலைவர் ராபர்ட் அவர்களின் தலைமையில் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் அவர்கள் மெர்சி ஹோமில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வின் போது வடசென்னை மாவட்ட தலைவர் சினு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் யுவராஜ், அன்பு, போஸ், தென் சென்னை மாவட்ட செயலாளர் ரஞ்சித் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பூபதி மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் பிறந்த நாளில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. வெளியான போட்டோஸ், குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!

அது மட்டுமல்லாமல் புரசைவாக்கம் மாநகராட்சி தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

விஷால் பிறந்த நாளில் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. வெளியான போட்டோஸ், குவிந்து வரும் வாழ்த்துக்கள்.!!