
Virat Kohli Controversy – ஆஸ்திரேலியா சென்று உள்ள இந்திய அணி டி-20 போட்டியை சமன் செய்த நிலையில்,
நேற்று நடந்த பயிற்சி ஆட்டதில் டாஸ் போடப்பட்ட போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி கால் சட்டை அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவுடன் மோத உள்ள டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு எதிரான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் டாஸ் நேரத்தில் கோலி கால் சட்டை அணிந்து வந்தார்.
இப்படி அவமரியாதை தனமான காரியத்தை பண்ணிடரே என, கோலியின் இந்த கால் சட்டை விவகாரம் குறித்து நெட்சிசன்கள் பெரிதும் பேசி வருகின்றனர்.
இப்போட்டியின் முதல் ஆட்டம் மழையால் தடைபட்டது. அதனால், 4 நாள் பியிற்சி ஆட்டம் சிட்னியில் நடந்து வருகின்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா டாஸ் ஜெய்த்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 358 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இந்திய அணியின் 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர் என்பது குறிப்பிட தக்கது.