ரசிகர்களுடன் தளபதி எடுத்துக் கொண்ட வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாக உள்ளது.

என் நெஞ்சில் குடியிருக்கும்… ரசிகர்களுடன் தளபதி எடுத்துக் கொண்ட வீடியோ பதிவு வைரல்.!

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல வெளியாகி இணையதளத்தை ஆக்கிரமித்து இருந்தது.

என் நெஞ்சில் குடியிருக்கும்… ரசிகர்களுடன் தளபதி எடுத்துக் கொண்ட வீடியோ பதிவு வைரல்.!

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் மேடையில் செல்போனில் தனது கைகளால் அனைத்து ரசிகர்களுடனும் எடுத்துக் கொண்ட வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் அந்த வீடியோவை இணையதளத்தில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்

இதோ அந்த வீடியோ;